போலி மருந்துகளைப் பிள்ளைக்குக் கொடுத்து $50,000 நன்கொடை பெற்ற தாய்
வாசிப்புநேரம் -
(படம்: Pixabay)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஆஸ்திரேலியாவில் குவின்ஸ்லந்து மாநிலத்தை சேர்ந்த இணையத்தள பிரபலம் ஒருவர் தனது பெண் குழந்தைக்கு உடல் நலக்குறைவு உள்ளதாய்ப் பொய் கூறி நன்கொடை பெற்றதாகக்
குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
தனது ஒரு வயதுப் பெண் குழந்தைக்குத் தீராத நோய் உள்ளதாகச் சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார்.
ஆனால் அவர் தன் பிள்ளைக்கு மருத்துவர் பரிந்துரையில்லாத மருந்துகளை வேண்டுமென்றே கொடுத்து பின் அது அவதியுறும் காணொளியைச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாகத் துப்பறிவு அதிகாரிகள் கூறினர்.
பல மாத விசாரணைக்குப் பிறகு அந்த 34 வயதுப் பெண் கடந்த ஆண்டு (2024) ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை தன் பிள்ளைக்குத் தகாத மருந்துகளைக் கொடுத்தது தெரியவந்தது.
அதை மூடிமறைக்கவும் அவர் முயன்றதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.
கடந்த ஆண்டு (2024) அக்டோபர் 15ஆம் தேதி அந்தப் பிள்ளை கடுமையான உடல் குறைவினால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
அதன் பிறகு காவல்துறை விசாரணையைத் தொடங்கியது. மருத்துவப் பரிசோதனைகளில் குழந்தைக்குத் தகாத மருந்துகள் கொடுக்கப்பட்டது உறுதியானது.
தன் குழந்தைக்குத் தீராத நோய் உள்ளதாகப் பொய் கூறி அந்தப் பெண் 60,000 ஆஸ்திரேலிய டாலர் (50,953 வெள்ளி) நன்கொடையாகப் பெற்றார் என BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஆதாரம் : Others