$210,000 விளையாட்டுப் பொருள்கள் திருட்டு
வாசிப்புநேரம் -
படம்: South Australian Police
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஆஸ்திரேலியாவில் சுமார் 210,000 வெள்ளி மதிப்பிலான விளையாட்டுப் பொருள்களைத் திருடிய சந்தேகத்தில் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அடிலேய்ட் (Adelaide) நகரில் உள்ள அவரது வீட்டில் சுமார் 2,500 விளையாட்டுப் பொருள்களைக் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
அதில் 1,700 Lego பொட்டலங்கள் திறக்கப்படாமல் இருந்ததாக BBC செய்தி நிறுவனம் கூறியது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை எடுத்துச் செல்லவே 3 லாரிகள் தேவைப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
அதுவே மாநிலத்தின் ஆகப் பெரிய சில்லறை விற்பனை திருட்டு என்று அது சொன்னது.
அந்த 41 வயது ஆடவர் திருடிய பொருள்களை இணையத்தில் விற்க இருந்ததாக BBC குறிப்பிட்டது.
பொம்மைகள், தண்ணீர்த் துப்பாக்கிகள் ஆகியவையும் திருடப்பட்டிருந்தன.
இணையத்தில் விற்கப்படும் மலிவான பொருள்களை வாங்க வேண்டாம் என்று காவல்துறை பொதுமக்களை வலியுறுத்தியது.
அவ்வாறு வாங்குவோர் திருட்டுச் சம்பவங்களை ஊக்குவிப்பதாக அது கூறியது.

ஆதாரம் : Others