செயற்கை இதயத்துடன் உயிர் வாழ்ந்த ஆடவர்.. அதுவும் 100 நாள்களுக்கு மேல்
வாசிப்புநேரம் -

உலகிலேயே முதல்முறையாக முழு செயற்கை இதயம் பொருத்தப்பட்டுள்ள ஆடவர் ஒருவர் 105 நாள்களுக்கு உயிர் வாழ்ந்திருக்கிறார்.
அந்த ஆடவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்.
கடும் இதய செயலிழப்பை எதிர்நோக்கிய அவருக்கு டைட்டேனியத்தால் (titanium) செய்யப்பட்ட செயற்கை இதயம் பொருத்தப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் இது போன்ற அறுவை சிகிச்சை நடப்பது அதுவே முதல் முறை.
அந்த 6 மணிநேர அறுவை சிகிச்சை சென்ற ஆண்டு (2024) நவம்பர் 22ஆம் தேதி சிட்னியின் St Vincent மருத்துவமனையில் நடந்தது.
இதய நன்கொடைக்காகக் காத்திருக்கும் நேரத்தில் அந்தச் செயற்கை இதயம் பொருத்தப்பட்டது.
ஆனால் 105 நாள்களுக்குப் பிறகு இதய நன்கொடை கிடைத்ததால் அவருக்கு உண்மையான இதயம் பொருத்தப்பட்டது.
செயற்கை இதயத்துடன் அவர் 100 நாள்களுக்கு மேல் வாழ்ந்தது செயற்கை இதயத் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்திற்கு முக்கிய முன்னேற்றம் என்று மருத்துவமனை குறிப்பிட்டது.

ஆதாரம் : South China Morning Post