Skip to main content
லாஸ் ஏஞ்சலிஸ் ஆர்ப்பாட்டம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

லாஸ் ஏஞ்சலிஸ் ஆர்ப்பாட்டம் - ஆஸ்திரேலியச் செய்தியாளர் காவல்துறையால் சுடப்பட்டதற்கு ஆஸ்திரேலியப் பிரதமர் கண்டனம்

வாசிப்புநேரம் -
லாஸ் ஏஞ்சலிஸில் நடந்த ஆர்ப்பாட்டங்களுக்கு இடையே ஆஸ்திரேலியச் செய்தியாளர் ஒருவர் ரப்பர் தோட்டாவால் சுடப்பட்டார். அதற்கு ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்ட்டனி அல்பனீசி (Anthony Albanese) கண்டனம் தெரிவித்தார்.

9News எனும் ஆஸ்திரேலிய ஊடகத்தைச் சேர்ந்த லாரன் தொமாசி (Lauren Tomasi) காலில் சுடப்பட்டார். தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பான அந்தச் சம்பவத்தின் காணொளி இணையத்தில் பரவுகிறது.

"காணொளியில் நடந்தது கொடூரமான செயல்," என்று திரு அல்பனீசி கூறினார்.

காணொளியில் திருவாட்டி தொமாசி ஓர் ஊடகத்தைச் சேர்ந்த செய்தியாளர் என்பதை அடையாளம் காண முடிகிறது என்றும் திரு அல்பனீசி கூறினார்.

செய்தியாளர்கள் சமுதாயத்தில் முக்கியப் பங்காற்றுகின்றனர் என்றும் அவர்களிடம் இவ்வாறு நடந்துகொள்ளக்கூடாது என்றும் அவர் கூறினார்.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்