Skip to main content
ஆஸ்திரியா பள்ளித் தாக்குதல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஆஸ்திரியா பள்ளித் தாக்குதல் - சந்தேக நபர் முன்னாள் மாணவர்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஆஸ்திரியாவில் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதை அடுத்து 3 நாளுக்குத் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

தாக்குதலில் 11 பேர் மாண்டனர்.

பள்ளியின் முன்னாள் மாணவரான 21 வயது ஆடவர் தாக்குதலை நடத்தியதாகக் காவல்துறை கூறியது.

அந்த ஆடவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் அது குறிப்பிட்டது.

ஐரோப்பாவில் பல ஆண்டுக்குப் பிறகு நடந்த மோசமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமாக அது கருதப்படுகிறது.

சம்பவத்தில் மேலும் 12 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறினர்.

ஆஸ்திரிய அதிபர் கிறிஸ்டியன் ஸ்டோக்கர் (Christian Stocker) நாட்டின் வரலாற்றில் அது ஒரு இருள் சூழ்ந்த தினம் என்றார்.

சிந்தித்துப் பார்க்க முடியாத வன்முறை செயல் அது என்று அவர் சாடினார்.

இந்தச் சம்பவம் நாட்டின் துப்பாக்கிச் சட்டத்தின்மீது கவனத்தைத் திருப்பியுள்ளது.

சந்தேக நபர் இரு துப்பாக்கிகளைக் கொண்டு தாக்கினார்.

இரண்டுமே அவர் சட்டப்படி வாங்கிய துப்பாக்கிகள்.

தாக்குதலுக்கான காரணத்தை உறுதிப்படுத்தும் விசாரணை நடைபெறுவதாய் அதிகாரிகள் கூறினர்.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்