Skip to main content
தடைகளும் எனக்கொரு படிக்கல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தடைகளும் எனக்கொரு படிக்கல் - வெற்றிக் கொடி நாட்டிய இளையர்

வாசிப்புநேரம் -
தடைகளும் எனக்கொரு படிக்கல் - வெற்றிக் கொடி நாட்டிய இளையர்
(கோப்புப் படம்: AFP)
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

16 வயதில் சக மாணவர்களால் கேலி செய்யப்பட்ட இளையர்.

27 வயதில் உலகின் ஆக வலிமையானவர் என்ற பட்டம் வென்றார்.

அவர்தான் பிரிட்டனைச் சேர்ந்த டாம் ஸ்டோல்ட்மன் (Tom Stoltman).

அவருக்கு Autism எனும் தொடர்புத் திறன் குறைபாடுள்ளது.

பள்ளிப் பருவத்தில் பலரும் அவரை ஏளனம் செய்தனர்.

அதனால் கூனிக் குறுகிப் போனார். நாள்முழுதும் காணொளி விளையாட்டில் பொழுதைக் கழித்தார்.

டாம்மின் கவனத்தைத் திசைதிருப்ப அவரது சகோதரர் லூக் (Luke) முடிவெடுத்தார்.

உடற்பயிற்சிக் கூடத்துக்கு டாமை அழைத்துச் சென்றார்.

லூக் கொடுத்த ஊக்கத்தால் டாம் உடற்பயிற்சியில் ஆர்வங்கொண்டார்.

21 வயதில் லூக் ஸ்கோட்லந்தின் ஆக வலிமையானவர் என்ற பட்டம் வென்றார்.

அதைக் கண்டதும் அவரைப்போல் சாதிக்க விரும்பினார் டாம்.

நாள்தோறும் கடுமையாகப் பயிற்சி செய்தார். உடல் எடையை அதிகரித்தார்.

27 வயதில் உலகின் ஆக வலிமையானவர் பட்டம் வென்றார். பிறகு மேலும் இருமுறை அதே பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

31 வயது டாம்மின் எடை தற்போது 180 கிலோ.

அவரால் 200 கிலோ எடையுள்ள பாறாங்கல்லைத் தூக்கிக்கொண்டு ஓட முடியும்.

350 கிலோ எடையை 12 முறை தூக்கிச் சுமக்கும் ஆற்றல் கொண்டுள்ளார்.

"16 வயதில் என்னைக் கேலி செய்தபோது, நான் ஏன் வித்தியாசமாக இருக்கிறேன் என்று புலம்பினேன். ஆனால் இன்று எனது குறையைப் பலமாக மாற்றியதில் பெருமை அடைகிறேன்," என்றார் டாம்.

 

ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்