Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரியாவில் கத்திக்குத்துத் தாக்குதல், 14 வயதுச் சிறுவன் மரணம்

வாசிப்புநேரம் -
ஆஸ்திரியாவின் (Austria) தென்பகுதியில் நடந்த கத்திக்குத்துத் தாக்குதலில் 14 வயதுச் சிறுவன் மாண்டதாகவும் ஐவர் காயமுற்றதாகவும் The Guardian செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சம்பவம் நேற்று (15 பிப்ரவரி) நடந்தது.

தாக்குதலை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் சிரியாவைச் சேர்ந்த 23 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டார்.

சம்பவத்திற்கான காரணம் தெரியவில்லை என்றும் விசாரணை தொடர்கிறது என்றும் காவல்துறை கூறியது.

சம்பவத்தைக் கண்ட 42 வயது ஆடவர் தாக்குதல் மேலும் மோசமடைவதைத் தடுக்க முயன்றார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறுவனைப் பறிகொடுத்த குடும்பத்தாருக்குக் கரிந்தியா (Carinthia) மாநில ஆளுநர் தமது இரங்கலைத் தெரிவித்தார்.


 
ஆதாரம் : Others/The Guardian

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்