Skip to main content
"பேங்காக் சூதாட்ட நிலையத்தில் சிங்கப்பூரர்கள் இருவர் கைது"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

"பேங்காக் சூதாட்ட நிலையத்தில் சிங்கப்பூரர்கள் இருவர் கைது"

வாசிப்புநேரம் -

தாய்லந்தின் தலைநகர் பேங்காகில் உள்ள சூதாட்ட நிலையத்தில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் வெளிநாட்டவர் 12 பிடிபட்டனர்.

அவர்களில் இருவர் சிங்கப்பூரர்கள் என்று காவல்துறையினர் The Nation ஊடகத்திடம் கூறினர்.

எஞ்சியவர்கள், சீனா, பிலிப்பீன்ஸ், இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

யன்னாவா வட்டாரத்தில் உள்ள சீன உணவகத்தில் சட்டவிரோதமாகச் சூதாட்டம் நடத்தப்படுவதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

நேற்று முன்தினம் (13 பிப்ரவரி) அவர்கள் நடத்திய அதிரடிச் சோதனையில் கட்டடத்தின் மூன்றாம் தளத்தில் சூதாட்டம் நடத்தப்பட்டதை காவல்துறையினர் அறிந்தனர்.

கட்டடத்தின் மேலாளரையும் அவர்கள் கைதுசெய்தனர்.

சுமார் 5,300 சிங்கப்பூர் வெள்ளி உட்பட ரொக்கமும் சூதாட்டப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

காவல்துறையினரின் விசாரணை தொடர்வதாக The Nation சொன்னது.

ஆதாரம் : Others/The Nation

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்