Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

டெஸ்ட் கிரிக்கெட்: முதல்முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது பங்களாதேஷ்

வாசிப்புநேரம் -
டெஸ்ட் கிரிக்கெட்: முதல்முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது பங்களாதேஷ்

William WEST / AFP

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்களாதேஷ் முதல்முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருக்கிறது.

பலம்வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணிலேயே தோற்கடித்தது நாட்டின் மாபெரும் சாதனை என்று ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் புகழ்ந்தனர்.

"இதைப் பற்றி நாங்கள் கனவு கண்டோம். ஆனால் ஆஸ்திரேலியாவுடன் பொருதி இவ்வளவு பிரமாண்டமாக வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை," என்று முன்னாள் அணித் தலைவர் அக்ரம் கான் கூறினார்.

அணி வீரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டதால் வெற்றி பெற முடிந்ததாகத் திரு கான் வலியுறுத்தினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட பங்களாதேஷுக்கு இன்னும் பற்பல வாய்ப்புகள் கிடைக்கவேண்டும் என்பதை வெற்றி உறுதிப்படுத்தியதாக அணியின் வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரி அப்துர் ரஸாக் சொன்னார்.

பல ஆண்டுகளாக உள்ளூர் கிரிக்கெட்டிலும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் செய்யப்பட்ட முதலீடு அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்றும் அவர் கூறினார்.

ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்