Skip to main content
"பங்களாதேஷ் தேர்தலில் மோசடி"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"பங்களாதேஷ் தேர்தலில் மோசடி" - ஜமாத் இ-இஸ்லாமி குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -
"பங்களாதேஷ் தேர்தலில் மோசடி" - ஜமாத் இ-இஸ்லாமி குற்றச்சாட்டு
MOHD RASFAN / AFP

பங்களாதேஷ் தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக ஜமாத் இ-இஸ்லாமி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. 

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி வெற்றியைக் கொண்டாடும் நேரத்தில்  வாக்குகளை எண்ணுவதில் மோசடி நடந்திருப்பதாக எதிர்த்தரப்பு குற்றஞ்சாட்டுகிறது. 

ஜமாத் இ-இஸ்லாமி கட்சித் தலைவர் ஷஃபிக்குர் ரஹ்மான் (Shafiqur Rahman) மிகப்பெரிய மோசடி நடந்திருப்பதாகவும் நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் கேட்கப் போவதாகவும் சொன்னார். 

முன்னையப் பிரதமர் கலிடா ஸியாவின் மகனான 60 வயது திரு தாரிக் ரஹ்மான் (Tarique Rahman) புதிய பிரதமராகப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பங்களாதேஷில் 30 வயதுக்குக் குறைவான இளையர்கள் தொடங்கிய ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து புதிய ஆட்சி மாற்றம் வந்திருக்கிறது.

ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்