எரிசக்தியைச் சேமிக்க வேலை நேரம் குறைக்கப்படும் - பங்களாதேஷ்
படம்: Reuters
This audio is generated by an AI tool.
பங்களாதேஷில் எரிசக்தியைச் சேமிக்க வேலை நேரமும் வர்த்தக நேரமும் குறைக்கப்படுகின்றன.
அரசாங்க அலுவலகங்கள் இனி மாலை 4 மணிக்கு மூடப்படவேண்டும்.
சந்தைகளும் கடைத்தொகுதிகளும் மாலை 6 மணிக்குள் மூடப்பட வேண்டும்.
தேவையில்லாமல் விளக்குகளைப் பயன்படுத்தவேண்டாம் என்றும் பங்களாதேஷ் அரசாங்கம் வலியுறுத்தியது.
மாணவர்களுக்கு இணையம் வழி பாடம் நடத்தக் கல்வியமைச்சு பள்ளிகளுக்கு அறிவுறுத்தவிருக்கிறது.
ஈரான் போரால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்கப் பங்களாதேஷ் திணறுகிறது.
எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்கப் பள்ளிகளுக்கென மின் பேருந்துகளை இறக்குமதி செய்ய ஊக்குவிக்கப்படுகிறது.
அதற்குத் தீர்வை கட்டத் தேவையில்லை.
பெட்ரோல் நிலையங்களில் மக்கள் எரிபொருளைத் தேவைக்கும் அதிகமாக வாங்கிப் பதுக்கி வைத்துக்கொள்கின்றனர்.
அதனால் நிலையங்கள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.