Skip to main content
பங்களாதேஷ் தொழிற்சாலைகளில் தீ ஏற்பட்டதற்குக் காரணம்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பங்களாதேஷ் தொழிற்சாலைகளில் தீ ஏற்பட்டதற்குக் காரணம்?

வாசிப்புநேரம் -
பங்களாதேஷ் தொழிற்சாலைகளில் தீ ஏற்பட்டதற்குக் கட்டடக் கூரையின் கதவு மூடப்பட்டிருந்தது; நச்சுவாயு ஆகியவை காரணங்கள் எனத் தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் 16 பேர் மாண்டனர். மேலும் பலர் காயமுற்றனர்.

இது பங்களாதேஷின் மோசமான தொழில்துறைப் பாதுகாப்பை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது.

2012, 2013களில் நடந்த சம்பவங்களை அடுத்து பங்களாதேஷின் பாதுகாப்பற்ற வேலையிடச் சூழலைக் கருத்தில்கொண்டு சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.

இருந்தாலும் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது.

தீச்சம்பவம் ஏற்பட்டதற்கான காரணத்தை ஆராயவும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் குறைபாடுகள் ஏற்பட்டதற்குக் காரணமானோரைக் கண்டறியவும் அந்நாட்டு அரசாங்கம் விசாரணையை மேற்கொள்கிறது.
ஆதாரம் : Reuters

மேலும் செய்திகள் கட்டுரைகள்