இந்தியாவிடமிருந்து கூடுதல் எரிபொருள் வாங்க விரும்பும் பங்களாதேஷ்
படம்: AFP
This audio is generated by an AI tool.
இந்தியாவிடமிருந்து கூடுதலாக எரிசக்தியும் உரமும் வாங்க பங்களாதேஷ் விரும்புகிறது.
இரு நாடுகளும் அரசதந்திர உறவை மேம்படுத்த இணங்கியதைத் தொடர்ந்து பங்களாதேஷ் எரிபொருளை வாங்கத் திட்டமிடுகிறது.
பங்களாதேஷின் வெளியுறவு அமைச்சர் கலிலூர் ரஹ்மான் (Khalilur Rahman) இந்தியா சென்றுள்ளார்.
திரு ரஹ்மான் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரைச் சந்தித்தார்.
இருதரப்பும் ஒத்துழைப்பை ஆழப்படுத்த விருப்பம் தெரிவித்தன.
பயணத்தின்போது திரு ரஹ்மான் இந்தியாவின் எண்ணெய் வள அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியையும் (Hardeep Singh Puri) சந்தித்தார்.
அண்மையில் இந்தியா டீசலைப் பங்களாதேஷுக்கு அனுப்பியது. அதற்குத் திரு ரஹ்மான் நன்றி தெரிவித்தார்.
பெட்ரோல், உரம் ஆகியவற்றை வழங்க இந்தியா தயாராய் இருப்பதாகத் திரு பூரி சொன்னதாய் பங்களாதேஷின் வெளியுறவு அமைச்சு கூறியது.