Skip to main content
விசா மோசடி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

விசா மோசடி - விமான நிலையத்தில் கதறிக் கண்ணீர்விட்ட ஆடவர்

வாசிப்புநேரம் -
பங்களாதேஷைச் சேர்ந்த முகமது பாபுல் உசேன் (Mohammad Babul Hossain) எனும் தையல்காரர் மோசடிக்குள்ளான சம்பவம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சொந்த ஊரில் சிறிய கடை நடத்திவந்த பாபுலுக்கு வெளிநாடு சென்று கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற நீண்டநாள் கனவு இருந்தது.

அதற்காக அவர் பல வாய்ப்புகளைத் தேடி வந்தார்.

அப்போதுதான் பாபுலுக்கு சோஹேல் (Sohel) என்ற நபர் அறிமுகமானார். அவர் தாய்லந்தில் உள்ள ஓர் உணவ நிறுவனத்தில் மாதம் 50,000 டகா (சுமார் 520 வெள்ளி) சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார். அவரை நம்பி பாபுல் சுமார் 360,000 டகா (சுமார் 3,800 வெள்ளி) செலுத்தினார்.

தனது கடைப் பொருள்களை விற்றும், பலரிடம் கடன் வாங்கியும் பணத்தைச் சேர்த்தார். அவருக்கு விசாவும் விமானச்சீட்டும் அனுப்பப்பட்டன.

நேற்றிரவு 2 மணிக்கு விமானம் ஏறுவதற்காக பாபுல் டாக்கா விமான நிலையத்துக்குச் சென்றார்.

ஆனால் அதிகாரிகள் அவரது விசாவும் விமானச்சீட்டும் போலியானவை என்று கூறினர்.

நிலைகுலைந்த பாபுல் அங்கேயே கதறி அழுதார்.

"கடனை எப்படி அடைப்பது? நான் வெளிநாடு போவதாக ஊரே நினைத்துக்கொண்டிருக்கிறது, ஆனால் இப்போது வீட்டிற்குப் போகக்கூட தைரியம் இல்லை" என்று அவர் கண்ணீர் விட்டு அழுதார்.

பாபுலுக்கு இது முதல் சம்பவம் அல்ல.

அவர் ஏற்கனவே 2 முறை பணத்தைப் பறிகொடுத்து ஏமாந்துள்ளார்.
 
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்