Skip to main content
விமானத்தில் போலிச் சிப்பந்தி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

விமானத்தில் போலிச் சிப்பந்தி

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஒரு பெண் மோசடிக்கு ஆளானார்...

அதனால் பெற்றோரை ஏமாற்ற முற்பட்டார்...

விமானச் சிப்பந்தியின் சீருடையை அணிந்து விமானத்தில் ஏறிய அவர் சமூக ஊடகத்தில் பிரபலமாகியுள்ளார்.

கேய்ருன் நிசா (Khairun Nisa) அண்மையில் பாத்திக் ஏர் (Batik Air) விமானத்தில் ஏறினார்.

அவர் அணிந்த சீருடை சற்று வித்தியாசமாகத் தென்படுவதைக் கவனித்த சிப்பந்திகள் உடனடியாக அதிகாரிகளிடம் தகவல் அளித்தனர்.

விமானம் பலேம்பாங்கிலிருந்து (Palembang) ஜக்கர்த்தாவை அடைந்தபோது நிசா விசாரிக்கப்பட்டார்.

தாம் ஒரு சிப்பந்தி என்று சொல்லி அவர் ஊழியர் அடையாள அட்டை ஒன்றைக் காட்டினார்.

அட்டை போலி என்பதை அறிந்த அதிகாரிகளிடம் நிசா பின்னர் உண்மையை ஒப்புக்கொண்டார்.

அவருக்குப் பாத்திக் ஏர் சிப்பந்தியாக ஆசை...

பணம் கொடுத்தால் சிப்பந்தியாகிவிடலாம் என்று சொன்ன ஒருவரிடம் நிசா பணத்தைக் கொடுத்துவிட்டார்.

அவர் ஏமாந்து சென்றார்.

உண்மையைப் பெற்றோரிடம் சொல்லமுடியாமல் தவித்த நிசா சிப்பந்தியைப் போல் நடிக்கத் தொடங்கினார்.

அவர் அதற்காக இணையத்திலிருந்து சீருடையை வாங்கினார்.

மகள் வேலைக்குச் செல்வதைக் காண விரும்பிய பெற்றோர் நிசாவுடன் பலேம்பாங் விமான நிலையம் வரை வந்தனர்.

அவர்களை நம்பவைக்க நிசாவும் சீருடையை அணிந்தார்.

அவர் விமானச்சீட்டு ஒன்றையும் வாங்கினார்.

விமானம் ஏறுவதற்கு நேரமாகிவிட்டதால் தம்மால் சீருடையிலிருந்து மாறமுடியவில்லை என்று விமான நிலையத்தின் காவல்துறையினரிடம் நிசா சொன்னார்.

அவர் தீய எண்ணத்துடன் சிப்பந்தியைப் போல் நடிக்கவில்லை என்பதால் அவரைக் கைதுசெய்யவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்