ஜப்பானில் ஓடி ஓடி நால்வரைத் தாக்கிய கரடி
REUTERS/Sakura Murakami
ஜப்பானில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த கரடி நால்வரைத் தாக்கியுள்ளது.
அவர்களில் ஒருவர் 20 வயதுடைய ஆடவர்.
எஞ்சிய மூவர் மூத்தோர்.
புக்குஷிமா (Fukushima) மாநிலத்தில் கரடியின் தாக்குதலைக் காட்டும் காணொளி இணையத்தில் பகிரப்பட்டது.
தப்பித்து ஓடும் 20 வயது இளையரைக் கரடி விரட்டிப் பிடிப்பதைக் காணொளியில் பார்க்கமுடிகிறது.
கரடிப் பிடியில் சிக்கும் போதெல்லாம் இளையர் எப்படியோ தப்பிடுவிடுகிறார்.
இறுதியில் கரடி அவரைக் கீழே தள்ளிவிட்டு ஒரு வளாகத்துக்குள் ஓடுகிறது.
அங்கு வேலை செய்யும் 60 வயது ஆடவரைக் கரடி தாக்கியது.
மேலும் ஓர் ஊழியரும் அக்கம்பக்கத்தில் வாழும் 80 வயதுப் பெண்ணும் தாக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
அதிகாரிகள் கரடியைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
ஜப்பானில் கடந்த ஆண்டு மட்டும் கரடிகள் 230 தாக்குதல்களை நடத்தியுள்ளன.
13 பேர் மாண்டனர்.