உலகம் trending
ஆடவரின் மதிய உணவு கரடியின் கையில்!
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்காவின் கொலராடோ (Colorado) மாநிலத்தில் ஒரு கரடிக் குட்டி வாகனத்துக்குள் நுழைந்து சாண்ட்விச்சுகளைச் (sandwich) சுவைத்துள்ளது.
வாகனம் 52 வயது ஆன்டி கெரிகனுக்குச் (Andy Kerrigan) சொந்தமானது.
அவர் பழுதுபார்ப்பு வேலைகளைச் செய்பவர்;சாண்ட்விச்சுகள் அவரது அன்றைய மதிய உணவு.
வேலைக்கு இடையே தாகம் ஏற்பட்டதால் கெரிகன் தண்ணீர் குடிப்பதற்குத் தமது வாகனத்திற்குச் சென்றார்.
கதவைத் திறந்ததும் அவர் கரடியைக் கண்டார்.
வியப்படைந்த கெரிகன் கரடிக் குட்டியைப் படம் எடுத்தார்.
நீண்டநேரப் போராட்டத்திற்குப் பிறகு அவர் வெற்றிகரமாகக் கரடியை விரட்டினார்.
கெரிகன் வாகனத்தின் சன்னலைச் சரியாக மூடவில்லை.
கரடி சன்னலை இறக்கி அதன் வழியாக வாகனத்திற்குள் நுழைந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதற்கு முன்பு அதே கரடிக் குட்டி உணவு தேடித் திரிவதைப் பார்த்திருப்பதாக கெரிகன் கூறினார்.

ஆதாரம் : Others