உலகம் trending
அமெரிக்க நகரில் அமைதியாகச் சுற்றித்திரிந்த கரடி
வாசிப்புநேரம் -
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்காவின் டென்னஸி (Tennessee) மாநிலத்திலுள்ள காட்லின்பர்க் (Gatlingburg) நகரில்...
மக்கள் மத்தியில்...
சுற்றித் திரிந்தது கரடி!
யாரையும் கண்டுகொள்ளாமல் நடந்தது கரடி.
அதைப்பார்த்த மக்கள் வியந்தனர்.
சிலர் இருந்த இடத்திலேயே நின்றுவிட்டனர்.
பலர் கரடியைப் படம்பிடிக்கத் தொடங்கினர்.
சம்பவம் செப்டம்பர் முதல் தேதி நடந்தது. அதை ஒருவர் காணொளியாக எடுத்துப் பகிர்ந்தார். அந்தக் காணொளி இப்போது சமூக ஊடகங்களில் பரவுகிறது.
அமெரிக்க ஊடகங்களும் அதைப் பகிரத் தொடங்கியிருக்கின்றன.
காணொளியை எடுத்தவர் தாம் காட்டில் நடக்கச் சென்றபோது ஒரு கரடியையும் பார்க்கவில்லை என்றார்.
ஆனால் நகரத்தில் கரடிகளைக் காண்பது எளிதாகிவிட்டதாக அவர் சொன்னார்.
மக்கள் கரடிகளுக்குத் தீனி போடுவது, கரடிகளைத் துரத்துவது ஆகிய காரணங்களால் அவை இப்போது நகரங்களுக்குள் வரத் தொடங்கிவிட்டதாக அவர் விளக்கினார்.
காணொளியைக் கண்ட இணையவாசிகளிடையே மாறுபட்ட கருத்துகள் இருந்தன.
கரடி தன் வீட்டை இழந்ததால்தான் நகர்ப்புறத்துக்கு வந்திருக்கிறது என்று பெரும்பாலானோர் கூறினர்.
விலங்குகளின் இயற்கை வாழ்விடங்களை அழிப்பதால் வேறு வழியின்றி அவை மனிதர்கள் வசிக்கும் நகரங்களுக்குள் புகுவதாகப் பலர் பதிவிட்டனர்.
காணொளியைக் கண்டு மனம் வேதனையடைந்ததாகவும் அவர்கள் பகிர்ந்தனர்.

ஆதாரம் : Mediacorp Seithi