Skip to main content
பாம்பைப் பிடித்தபடி ஆடியவருக்கு அபராதம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

பாம்பைப் பிடித்தபடி ஆடியவருக்கு அபராதம்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இலங்கையில் பாம்பைப் பிடித்துக்கொண்டு நடனமாடியவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அவர் 19 வயது மெத்மி ஹிரண்யா (Methmi Hiranya).

ஐந்து மாதங்களுக்கு முன்பு அழகுப் போட்டியில் கலந்துகொண்டார்.

அப்போது அவர் மலைப்பாம்பை ஏந்தியபடி மேடையில் நடனமாடினார்.

பாம்பின் நீளம் 2.1 மீட்டர். அது நச்சுத்தன்மை வாய்ந்ததல்ல. அந்த வகை மலைப்பாம்பு அருகிவருகிறது.

ஹிரண்யா பாம்புடன் நடனமாடும் காட்சி இணையத்தில் பரவியதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அவருக்கு 50,000 ரூபாய் (சுமார் 190 வெள்ளி) அபராதம் விதிக்கப்பட்டது.

பாம்பை வாடகைக்குத் தந்த ஆடவருக்கு 100,000 ரூபாய் (சுமார் 380 வெள்ளி) அபராதம்.

இருவருக்கும் அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டது.

மலைப்பாம்பு காயமின்றி வனத்திற்குள் விடுவிக்கப்பட்டது.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்