Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அறுவடைக்குத் தயாராகப் பயிர்கள்- தேனீக்களைப் பறக்கவிடும் விவசாயிகள்..காரணம்?

வாசிப்புநேரம் -
கென்யாவில் உள்ள விவசாயிகள், அறுவடை செய்யத் தயாராக இருக்கும் பயிர்களைக் பாதுகாக்க அரும்பாடுபடுகின்றனர்.

உணவு தேடி வரும் யானைகளிடமிருந்து பயிர்களைக் காக்கப் பற்பல முயற்சிகளை எடுப்பதே அவர்களின் அன்றாடப் பணியாகிவிட்டது.

வளர்ந்து நிற்கும் பயிர்களை யானைக் கூட்டம் மிக வேகமாக மேய்ந்து பசியைத் தணித்துகொள்கிறது.

அவற்றை விரட்டப் பல வழிகளைக் கைவசம் வைத்திருக்கின்றனர் விவசாயிகள்.

தேனீக்களைப் பறக்கவிட்டு யானைகளை வரவிடாமல் தடுப்பது....

யானைகளுக்குப் பிடிக்காத மிளகாய், இஞ்சி, சூரியகாந்தி மலர் முதலியவற்றைப் பயிரிடுவது....

அதிக ஒலி எழுப்பும் கருவிகள், மாட்டுச்சாணம் போன்றவற்றையும் விவசாயிகள் பயன்படுத்துவதுண்டு.

யானைகளை உள்ளே வராமல் தடுக்க
மின்-வேலிகளைப் பொருத்துவது மற்றொரு திட்டம்.

ஆனால் அதற்கான செலவு கட்டுப்படியாக இல்லை என்கின்றனர் விவசாயிகள்.

யானைகளுக்கும் பாதுகாப்புத் தேவை என்று கூறுகிறது விலங்கு நல அமைப்பு ஒன்று.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்