Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பெய்ச்சிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை யார் நேரடியாகக் காணலாம்?

வாசிப்புநேரம் -
பெய்ச்சிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை யார் நேரடியாகக் காணலாம்?

(படம்:Noel Celis/AFP)

சீனா பெய்ச்சிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டுகளைப் பொதுமக்களுக்கு விற்கும் திட்டத்தை ரத்துசெய்துள்ளது.

அதற்குப் பதிலாக நுழைவுச்சீட்டுகள் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே விநியோகிக்கப்படும் என்று சீனா தெரிவித்துள்ளது. 

அவர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவர் என்பது பற்றியும் அவர்கள்  தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமா என்பது குறித்தும் தெளிவான தகவல் இல்லை. 

பெய்ச்சிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சுமார் மூன்று வாரங்களில் இடம்பெறவுள்ளன. இதற்கிடையே அதிகாரிகள் அந்த முடிவை மேற்கொண்டனர். 

சீனாவில் தினசரி கிருமித்தொற்று எண்ணிக்கை 200ஐத் தாண்டியுள்ளது.

சுமார் ஈராண்டுகளில் பதிவான ஆக அதிக எண்ணிக்கை அது.

ஓமக்ரான் வகைக் கிருமியால் நோய்த்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குறைந்தது 5 வட்டாரங்களில் ஓமக்ரான் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa