கம்போடியாவில் இரு சீனர்கள் கொலை: "கடுமையான தண்டனை விதிக்கப்படவேண்டும்" - சீனத் தூதரகம்
வாசிப்புநேரம் -
AFP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
கம்போடியாவில் இரு சீனர்களைக் கொன்றவர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படவேண்டும் என்று அங்குள்ள சீனத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
மாண்டவர்களில் ஒருவர் 43 வயதுப் பெண் ஸாங் (Zhang); மற்றொருவர் 39 வயது ஆடவர் டொங் (Dong).
குற்றம் புரிந்தவர்கள் அவர்களைக் கொன்று அவர்களது உடல்களை ஆற்றில் வீசியதாகத் தடயவியல் விசாரணையில் தெரியவந்தது.
சாங், டொங் இருவரையும் காணவில்லை என்ற தகவல் தெரிந்தவுடன் அதிகாரிகள் தேடல் பணியைத் தொடங்கினர்.
அவர்கள் உடல்களை மீட்டெடுத்து மாண்டவர்களை அடையாளம் கண்டனர்.
இதுவரை 7 சீன நாட்டினர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணை தொடர்கிறது.

ஆதாரம் : CNA