ஐரோப்பிய நாடாளுமன்ற Huawei ஊழல் தொடர்பில் கைது நடவடிக்கை
வாசிப்புநேரம் -

(கோப்புப் படம்: Reuters/Gonzalo Fuentes)
பெல்ஜியம் அதிகாரிகள் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் Huawei ஊழல் தொடர்பில் சிலரைக் கைது செய்துள்ளனர்.
சீனத் தொலைத்தொடர்பு நிறுவனமான Huawei ஐரோப்பாவில் அதன் வர்த்தகச் சொத்துகளைப் பெருக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்குக் கையூட்டுக் கொடுத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
பெல்ஜியத்தில் ஊடகங்கள் அந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.
சுமார் 100 காவல்துறை அதிகாரிகள் புலன் விசாரணை நடத்தினர். பிரசல்ஸிலும் (Brussels) போர்ச்சுகலிலும் (Portugal) சோதனைகள் நடத்தப்பட்டன.
ஊழல், மோசடி, குற்றக்கும்பல் செயல்பாடு உள்ளிட்ட குற்றங்கள் நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
புலனாய்வில் ஒத்துழைக்கவிருப்பதாய்ச் சொன்ன Huawei குற்றச்சாட்டுகளைக் கடுமையாய் கருதுவதாகக் கூறியது.
Huawei குறித்து அக்கறை தெரிவித்த ஐரோப்பிய ஆணையப் பேச்சாளர், உறுப்பு நாடுகள் 5G கட்டமைப்பில் அந்நிறுவனத்தைக் கட்டுப்படுத்தும்படி கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : Others