ஜெல்லிமீனை நெருங்காதீர்! - புக்கெட்டில் எச்சரிக்கை
This audio is generated by an AI tool.
புக்கெட்டில் உள்ள சயாம் விரிகுடா கடற்கரையில் சுமார் 20 முதல் 30 ஜெல்லிமீன்கள் காணப்பட்டுள்ளன.
அவற்றை நெருங்கவேண்டாம் என்று சுற்றுப்பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Moon jellyfish வகையைச் சேர்ந்த மீன்களிடம் மிதமான நஞ்சு உள்ளது.
மனிதர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் ஜெல்லிமீனைத் தொடும்போது தோலில் தடிப்புகள் ஏற்படலாம் என்று அதிகாரிகள் கூறினர்.
ஜெல்லிமீனைத் தொட்டவர்கள் காயம் பட்ட பகுதியைக் கடல்நீரைக் கொண்டு கழுவலாம்.
காயம்பட்ட பகுதியை வெறுங்கையால் தொடவேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
அப்படி உடல்நிலை மோசமானால் உடனடியாக மருத்துவரை அணுகும்படி அவர்கள் அறிவுறுத்தினர்.