உக்ரேன் ரஷ்யாவைத் தாக்க அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு பைடன் அனுமதி வழங்கியது ஏன்?
வாசிப்புநேரம் -
அமெரிக்கா வழங்கியிருக்கும் ஆயுதங்களை வைத்து ரஷ்யாவின் உட்புறப் பகுதிகளைத் தாக்க உக்ரேனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உக்ரேன்-ரஷ்யப் பூசல் குறித்த அமெரிக்காவின் கொள்கையில் இது பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது.
ரஷ்யா மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவிடமிருந்து வாங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கும்படி உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) பலமுறை கேட்டிருந்தார். இறுதியில் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
பைடன் உக்ரேனுக்கு அனுமதி வழங்கக் காரணம்?
வட கொரிய ராணுவ வீரர்களை உக்ரேனில் சண்டையிட அனுப்புவதற்கு ரஷ்யா முடிவெடுத்தது. இன்னும் சில நாள்களில் ரஷ்யாவும் வட கொரியாவும் கர்ஸ்க் (Kursk) வட்டாரத்தில் இருக்கும் உக்ரேனியப் படைகளை விரட்டும் நோக்கத்தில் தாக்குதல் நடத்தவிருப்பதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு டோனல்ட் டிரம்ப் (Donald Trump) உக்ரேனுக்கான ஆதரவை நிறுத்தக்கூடும் என்ற அக்கறையும் நிலவுகிறது. அதனைக் கருத்தில்கொண்டு பைடன் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவதற்கு முன் முடிந்த அளவிற்குச் சீக்கிரமாக உக்ரேனுக்குக் கூடுதல் உதவி வழங்கத் திட்டமிடுவதாக நம்பப்படுகிறது.
உக்ரேன்-ரஷ்யப் பூசல் தொடங்கியதிலிருந்து இவ்வாண்டு ஜூன் மாதம் வரை, அமெரிக்கா உக்ரேனுக்கு ஆக அதிகமான ஆயுதங்களை வழங்கியிருக்கிறது.
பைடனின் முடிவு ஏற்படுத்தக்கூடிய தாக்கம்?
இதனால் பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளும் தாங்கள் வழங்கிய ஆயுதங்களைக் கொண்டு உக்ரேன், ரஷ்யாவின் உட்புறப் பகுதிகளைத் தாக்க அனுமதி வழங்கக்கூடும் .
இதுவரை இது குறித்து பிரட்டனோ பிரான்ஸோ எவ்விதக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் இது குறித்து இன்னும் எந்தவொரு பதிலும் கொடுக்கவில்லை. ஆனால் இது கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம் : Others