போலி வேலை நேர்காணல்... Binance இல் $6 பில்லியன் திருட்டு!
REUTERS/Dado Ruvic/Illustration
This audio is generated by an AI tool.
உலகின் ஆகப் பெரிய மின்னிலக்க நாணயப் பரிவர்த்தனை நிறுவனமான Binanceஇல் சுமார் 6 பில்லியன் டாலர் (சுமார் 7.7 பில்லியன் வெள்ளி) களவாடப்பட்டது குறித்துப் புதிய விவரம் வெளியாகியிருக்கிறது.
போலி வேலை நேர்காணல்கள், தீங்கிழைக்கும் மென்பொருள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இணைய ஊடுருவிகள் பணத்தைத் திருடியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்ற மாதம் 29ஆம் தேதி சுமார் நான்கு மணி நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.
வடகொரியாவுடன் தொடர்புடைய இணைய ஊடுருவிகள் அதற்குக் காரணம் என்று அமெரிக்காவின் மத்தியப் புலனாய்வுப் பிரிவு குற்றஞ்சாட்டியுள்ளது.
வடகொரியா அதனை மறுத்துள்ளது.
ஜூன் மாதமே சதித்திட்டம் தொடங்கியதாக Binance கூறியது.
முதலில் நிறுவனத்தின் மென்பொருள் பொறியாளர் ஒருவரின் கணினியில் தீங்கிழைக்கும் மென்பொருள் பதிவிறக்கப்பட்டது.
பின்னர் இன்னொரு பொறியாளருக்குப் போலி வேலை நேர்காணல் நடத்தப்பட்டது.
அதன்வழி நிறுவனத்தின் உள்கட்டமைப்புக்குள் ஊடுருவிகள் நுழைந்தனர்; பணத்தைக் கொள்ளையடித்தனர்.
களவாடியத் தொகையில் சுமார் 2.85 பில்லியன் டாலர் (சுமார் 3.6 பில்லியன் வெள்ளி) முடக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சொத்துகளில் 98 விழுக்காட்டைத் தனது சொந்த நிதியிலிருந்து ஈடுசெய்திருப்பதாய் Binance தெரிவித்தது.