Skip to main content
ரஷ்யத் தாக்குதல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ரஷ்யத் தாக்குதல் - உக்ரேனின் சில பகுதிகள் இருளில் மூழ்கின

வாசிப்புநேரம் -
ரஷ்யாவின் தாக்குதல்களால் உக்ரேனின் சில பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.

உக்ரேனின் எரிசக்திக் கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

குளிர்காலத்தைச் சமாளிக்கத் தலைநகர் கீவ்வில் (Kyiv) பலர் இயந்திரக் கருவிகளைச் சார்ந்துள்ளனர்.

இவ்வாரத் தொடக்கத்தில் ரஷ்யா கிட்டத்தட்ட 200 எறிபடைகளையும் ஆளில்லா வானூர்திகளையும் உக்ரேன்மீது பாய்ச்சியது.

விளைவு?

மில்லியன்கணக்கான வீடுகளில் மின்சாரம் இல்லை.

ஒருசில பகுதிகளில் 10 மணி நேரத்துக்கும் மேல் மின்சாரம் இன்றி மக்கள் தவித்தனர்.

ரஷ்யாவின் எறிபடைத் தாக்குதல்கள் எரிசக்தி ஆலைகளைப் பெரியளவில் சேதப்படுத்திவிட்டன.

இதுபோன்ற ஆலைகள் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்கின்றன.

உக்ரேனின் ஆகப் பெரிய எரிசக்தி விநியோக நிறுவனம் DTEK.

அந்த நிறுவனத்தின் ஐந்து ஆலைகள் மட்டுமே இப்போது எஞ்சியுள்ளன.

உக்ரேனில் தட்பநிலை 0 டிகிரி செல்சியஸில் உள்ளது.

உக்ரேனின் எரிசக்தி விநியோகத்தைத் தக்கவைக்க ஊழியர்கள் கடுமையாக உழைக்கின்றனர்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்