Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'பணத்தை எடுத்துக்கொண்டு ஓடு' என்ற தலைப்பில் வெற்று ஓவியம்- விளைவு?

வாசிப்புநேரம் -

டென்மார்க்கில் ஓவியம் வரைவதற்கு வழங்கப்பட்ட  பணத்தைத் திரும்பக் கொடுக்கும்படி கலைஞருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ரொக்கத்தைக் கொண்டு ஓவியம் வரையும்படி ஆல்பொர்க் நகரில் உள்ள Kunsten அரும்பொருளகம் கலைஞரிடம் கூறியிருந்தது.

அது கலைஞரிடம் 70,000 யூரோ (102,000 வெள்ளி) ரொக்கம் கொடுத்தது.

டென்மார்க்கிலும் ஆஸ்திரியாவிலும் பெறக்கூடிய சம்பளத்தைப் பிரதிபலிக்கும் ஓவியம் கிடைக்கும் என்று அரும்பொருளகம் எண்ணியிருந்தது.

அதற்குக் கிடைத்ததோ வெற்று ஓவியங்கள்.

அவற்றின் பெயர் "Take the Money and Run" அதாவது 'பணத்தை எடுத்துக்கொண்டு ஓடு'.

வெற்று ஓவியமாக இருந்தபோதிலும் அதனைக் காட்சிக்கு வைத்த அரும்பொருளகம் ரொக்கத்தைத் திரும்பக் கொடுக்கும்படி கலைஞரிடம் கேட்டது.

'அரும்பொருளகம் அது கொடுத்த பணத்தைவிட அதிகமான பணத்தைச் சம்பாதித்துள்ளது,' என்று கூறிய கலைஞர் பணத்தைக் கொடுக்க மறுத்துவிட்டார்.

அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. நீதிமன்றம் பணத்தைக் கொடுக்கும்படி அவரிடம் உத்தரவிட்டது.

ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்