Skip to main content
மேல்முறையீட்டை நிராகரித்த FIFA
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மேல்முறையீட்டை நிராகரித்த FIFA - அதிர்ச்சியில் மலேசியா

வாசிப்புநேரம் -
மேல்முறையீட்டை நிராகரித்த FIFA - அதிர்ச்சியில் மலேசியா
(கோப்புப் படம்: Reuters/Mandy Leong Huey Mun)
மலேசியாவின் 7 வீரர்கள் ஓராண்டுக்குக் காற்பந்து விளையாட விதிக்கப்பட்ட தடை நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

தடையை நீக்கக்கோரி மலேசியக் காற்பந்துச் சங்கமான FAM செய்த மேல்முறையீட்டை அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனமான FIFA நிராகரித்தது.

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2027 ஆசியக் கிண்ணத் தகுதிச்சுற்று ஆட்டங்களில் மலேசிய அணியின் புள்ளிகள் குறைக்கப்படும்.

FIFA-இன் தீர்ப்பை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மலேசியக் காற்பந்துச் சங்கத்துக்கு 21 நாள்கள் அவகாசம் உண்டு.

நடந்தது என்ன?

வியட்நாமுக்கு எதிரான 2027 ஆசியக் கிண்ணத் தகுதிச்சுற்று ஆட்டத்துக்கான பங்கேற்பை உறுதிசெய்ய 7 ஆட்டக்காரர்களுக்கு FAM சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என்பதை FIFA கண்டுபிடித்தது.

இதையடுத்து மலேசியக் காற்பந்துச் சங்கத்துக்கு 350,000 சுவிட்சர்லந்து ஃபிராங்க் (சுமார் 566,360 வெள்ளி) அபராதம் விதிக்கப்பட்டது.

7 ஆட்டக்காரர்களுக்கும் முறையே 2,000 ஃபிராங்க் (சுமார் 3,200 வெள்ளி) அபராதம் விதிக்கப்பட்டது. அவர்கள் காற்பந்து விளையாட 12 மாதங்கள் தடையும் விதிக்கப்பட்டது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்