Skip to main content
விண்வெளிக்குச் சென்ற 6 பெண்கள் பத்திரமாகத் திரும்பினர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

விண்வெளிக்குச் சென்ற 6 பெண்கள் பத்திரமாகத் திரும்பினர்

வாசிப்புநேரம் -
Blue Origin நிறுவனத்தின் விண்வெளிக்கப்பலில் விண்வெளிக்குச் சென்ற 6 பெண்கள் பத்திரமாகத் திரும்பியுள்ளனர்.

பிரபல பாடகி Katy Perry, CBS ஊடகச் செய்தியாளர் Gayle King, முன்னாள் விண்வெளி விஞ்ஞானி Aisha Bowe, மனித உரிமை ஆர்வலர் Amanda Nguyen, திரைப்படத் தயாரிப்பாளர் Kerianne Flynn, Amazon நிறுவனர் ஜெப் பெசோஸின் வருங்கால மனைவி Lauren Sanchez ஆகியவர்கள் விண்வெளிக்கலனில் பயணம் செய்தனர்.

பெருமை கொள்கிறோம் என்று பெண்கள் உணர்ச்சி ததும்பக் கூறினர்.

60 ஆண்டுக்கு முன் சோவியத் யூனியனின் Valentina Tereshkova விண்வெளிக்குச் சென்றபின் இதுதான் விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் குழு.

இது சிறுமிகளையும் இளம் பெண்களையும் விண்வெளி ஆய்வில் ஈடுபட ஊக்குவிக்கும் என்று திருவாட்டி Sanchez கூறினார்.

சிலர் குறைகூறினர்.

இது வெறும் சுற்றுலா என்று ஒருவர் சொன்னார்.

பிரபலங்களை விண்வெளிக்கு அனுப்புவது விண்வெளி விஞ்ஞானிகளின் கடுமையான உழைப்புக்கு இழிவாகும் என்று ஒரு பேராசிரியர் கூறினார்.

 
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்