Skip to main content
மதுக்கூடச் சுவருக்குள் பெண்ணின் சடலம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மதுக்கூடச் சுவருக்குள் பெண்ணின் சடலம்

வாசிப்புநேரம் -
மதுக்கூடச் சுவருக்குள் பெண்ணின் சடலம்
Unsplash/Carson Masterson
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 11 Jan 2026 10:40AM புதுப்பிப்பு : 11 Jan 2026 12:34PM

ஜப்பானின் ஹொக்காய்டோ (Hokkaido) வட்டாரத்தில் இருக்கும் மதுக்கூடத்தில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெண்ணின் உடல் கடையின் சுவரில் மறைத்துவைக்கப்பட்டதாக The Japan News ஊடகம் சொன்னது.

மதுக்கூடத்தின் உரிமையாளரான 49 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர்  பெண்ணின் உடலை அங்கு வைத்ததாகக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

ஆடவர் அவ்வாறு செய்ததை ஒப்புக்கொண்டதாகவும் The Japan News சொன்னது.

கடந்த மாதம் 31ஆம் தேதியிலிருந்து பெண்ணைக் காணவில்லை என்று காவல்துறையினருக்குப் புகார் கிடைத்திருந்தது.

மதுக்கூடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் அந்தக் காணாமல் போன பெண்ணுடையதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அதிகாரிகளின் விசாரணை தொடர்கிறது.

ஆதாரம் : Others/The Japan News

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்