ஏர் இந்தியா விபத்து -"போயிங் 787 ரக விமானங்களை முடக்கத் தேவையில்லை"
REUTERS/Amit Dave
This audio is generated by an AI tool.
போயிங் (Boeing) 787 ரக விமானத்தைச் சேவையிலிருந்து நிறுத்தத் தற்போது தேவை ஏற்படவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தியாவில் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியதை அடுத்து அமெரிக்காவின் போக்குவரத்து அமைச்சர் ஷொன் டஃபியும் (Sean Duffy) மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகத் தலைவர் கிறிஸ் ரோஷேலியுவும் (Chris Rocheleau) செய்தியாளர் கூட்டத்தில் அவ்வாறு கூறினர்.
விமானங்களை முடக்கத் தேவைப்படும் எந்தப் பாதுகாப்புத் தரவும் வெளிவரவில்லை என்று இருவரும் கூறினர்.
அதுபோன்ற தகவல் ஏதும் தெரியவந்தால் விமானங்களைச் சேவையிலிருந்து அகற்ற அமெரிக்கா தயங்காது என்று அவர்கள் தெரிவித்தனர்.
பாதுக்காப்பே அதிமுக்கியம் என்று வலியுறுத்தப்பட்டது.
போயிங் 787 ரக விமானம், உலகிலேயே பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் உள்ள விமானங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
விபத்துக்குப் பிறகு, போயிங் நிறுவனத்தின் பங்கு விலைகள் கிட்டத்தட்ட 5 விழுக்காடு சரிந்தன.