Skip to main content
Boeing விமானம் 'சிக்கலோடு' தரையிறங்கியது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

Boeing விமானம் 'சிக்கலோடு' தரையிறங்கியது

வாசிப்புநேரம் -
Boeing விமானம் 'சிக்கலோடு' தரையிறங்கியது

(படம்: REUTERS/Umit Bektas)

துருக்கியேவின் ஆகப்பெரிய இஸ்தான்புல் (Istanbul) நகரில் தரையிறங்கிய Boeing 767 ரக சரக்கு விமானத்தின் front landing gear எனும் முன்பகுதி துணைக்கருவி செயலிழந்தது.

அதனால் விமானத்தின் முன்பகுதி ஓடுபாதையில் தேய்த்துக் கொண்டே வந்து நின்றது.

துருக்கியேவின் போக்குவரத்து அமைச்சு அதிகாரி ஒருவர் அந்த விவரங்களை வெளியிட்டார்.

விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்த விசாரணை தொடங்கியுள்ளது.

அந்த Boeing 767 ரக சரக்கு விமானம் 10 ஆண்டுகள் சேவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

விமான மீட்புக் குழுவினரும் தீயணைப்புப் படையினரும் சம்பவத்தைக் கையாள தயார்நிலையில் இருந்தனர்.

சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்