Skip to main content
டிரம்ப் விதித்த வரிகளால் ஜப்பானில் குழப்பம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

டிரம்ப் விதித்த வரிகளால் ஜப்பானில் குழப்பம்

வாசிப்புநேரம் -
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் விதித்த வரிகளால் ஜப்பானிய பொருளாதாரத்தில் குழப்பம் ஏற்படக்கூடும் என ஜப்பானிய மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

ஜப்பானின் பொருளாதாரம் அண்மையில் மேம்படத்தொடங்கியது. ஆனால், டிரம்ப்பின் வரிகள் அதன் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் என மக்கள் அஞ்சுகின்றனர்.

பொருளாதாரம் மெதுவாக முன்னேறுவதாக மத்திய வங்கி கூறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் செலவும் ஆடம்பரப் பொருள்களுக்கு மக்கள் செய்யும் செலவும் பொருளாதாரத்தைப் பாதுகாக்க உதவும் என்று வங்கி தெரிவித்தது.

வரிகளின் தாக்கத்தைப்பற்றி மேலும் விவரமாகப் பேச ஜப்பானின் மத்திய வங்கி ஏப்ரல் 30ஆம் தேதி சந்திக்கவுள்ளது. வட்டி விகிதத்தை 0.5% அளவில் வைத்துக்கொள்ள வங்கி முடிவெடுத்திருக்கிறது.

திரு டிரம்ப் ஜப்பானில் தயாரிக்கப்படும் வாகனங்கள் மீது 25% வரியும் இதர பொருள்களின் மீது 24% வரியும் விதித்துள்ளார்.

ஜப்பானின் பொருளாதாரம் பெரும்பாலும் ஏற்றுமதிகளை நம்பியுள்ளது. ஆனால் இவ்வரிகளால் பொருளாதாரம் 0.8% சரியும் என நிபுணர்கள் ஊகிக்கின்றனர்.
 
ஆதாரம் : Reuters

மேலும் செய்திகள் கட்டுரைகள்