Skip to main content
விமானத்திலிருந்து பணத்தைத் திருடியவர்களுக்கு வலைவீச்சு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

விமானத்திலிருந்து பணத்தைத் திருடியவர்களுக்கு வலைவீச்சு

வாசிப்புநேரம் -

பொலிவியாவில் (Bolivia) விபத்தில் சிக்கிய ராணுவ விமானத்திலிருந்து பணத்தைத் திருடியர்களைத் தேட அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்துகின்றனர்.

சுமார் 20 வீடுகளில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை (27 பிப்ரவரி) எல் ஆல்ட்டோ (El Alto) நகரில் விமானம் விழுந்து நொறுங்கியது.

சில வாகனங்களும் சேதமடைந்தன. 

24 பேர் மாண்டனர்.

விமானத்தில் 50 மில்லியன் பொலிவியானோஸ் (சுமார் 9.2 மில்லியன் வெள்ளி) மதிப்புடைய ரொக்கம் இருந்தது.

சிதறிக்கிடந்த பணத்தை எடுக்க அக்கம்பக்கத்தில் இருந்த பலர் விரைந்தனர்.

பணநோட்டுகளில் 30 விழுக்காடு திருடப்பட்டதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.

அவர்களின் விசாரணை தொடர்கிறது.

ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்