Skip to main content
ஐரோப்பிய விமானங்களுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஐரோப்பிய விமானங்களுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள்

வாசிப்புநேரம் -
ஐரோப்பிய விமானங்களுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள்

படம்: Reuters/Gonzalo Fuentes

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஐரோப்பாவில் பல விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சில விமானங்கள் திட்டமிடப்படாத இடங்களில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளன.

அயர்லந்துத் தலைநகர் டப்ளினிலிருந்து (Dublin) இத்தாலியத் தலைநகர் ரோமுக்குச் (Rome) சென்றுகொண்டிருந்த Aer Lingus விமானம் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பிரான்ஸுக்குத் திருப்பிவிடப்பட்டது.

FlightRadar24 இணையத்தளத்தின் தகவல்கள்படி விமானிகள் அவசரநிலையை அறிவித்ததாகத் தெரிந்தது.

மிரட்டல் கிடைத்ததும் போர் விமானங்கள் அனுப்பப்பட்டதாகப் பிரெஞ்சு ஆகாயப்படை தெரிவித்தது.

பின்லந்தின் ஹெல்சிங்கியிலிருந்து புறப்பட்ட Finnair விமானமும் வெடிகுண்டு மிரட்டலைப் பெற்றது.

இருப்பினும் அது ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் (Vienna) திட்டமிட்டபடி தரையிறங்கியது.

ரோம் சென்ற மற்றொரு Finnair விமானத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக நிறுவனம் தெரிவித்தது.

போலந்தின் வார்சாவிலிருந்து (Warsaw) புறப்பட்ட LOT விமானம் சந்தேகத்துக்குரிய தகவலைத் தொடர்ந்து பெல்ஜியத் தலைநகர் பிரஸல்ஸில் (Brussels) பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவையில்லை என்று விமானநிலையப் பேச்சாளர் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமையும் ஐரோப்பாவில் சுமார் 10 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.

Ryanair நிறுவனத்தின் நான்கு விமானங்கள் மிரட்டல்களுக்கு இலக்காயின.

அதனால் வார்சாவில் ஒரு விமான நிலையம் சிறிது நேரம் மூடப்பட்டது. ரோமில் போர் விமானங்கள் அனுப்பப்பட்டன.

அனைத்து விமானங்களும் பாதுகாப்பாகத் தரையிறங்கின.

விரிவான சோதனைகளுக்குப் பிறகு வெடிபொருள்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்