Skip to main content
Booking.com இணையத்தளத்தில் ஊடுருவல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

Booking.com இணையத்தளத்தில் ஊடுருவல் - "தனிப்பட்ட விவரம் திருடப்பட்டிருக்கலாம்"

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பயண முகவர் தளமான Booking.com ஊடுருவப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் Booking.com ஊடுருவல் பற்றி தகவல் தந்தது.

ஊடுருவலில் வாடிக்கையாளர்கள் சிலரின் பழைய முன்பதிவுகள், புதிய முன்பதிவுகள் தொடர்புடைய விவரம் அணுகப்பட்டிருக்கலாம் என்று நிறுவனம் சொன்னது.

அதில் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் போன்ற விவரங்கள் அடங்கும்.

Booking.com கட்டமைப்பில் சேமித்து வைக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் நிதிப் பரிவர்த்தனைத் தகவல் ஊடுருவப்படவில்லை என்று அது உறுதிசெய்தது.

இப்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக Booking.com கூறியது.

புதிதாக முன்பதிவு செய்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இன்னொரு கடவுஎண்ணை வெளியிட்டிருப்பதாக அது சொன்னது.

வாடிக்கையாளர்கள் தங்களது மின்சாரச் சாதனங்கள் ஊடுருவப்படாமல் இருக்கத் தகுந்த மென்பொருளைப் பயன்படுத்தும்படிக் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்