ஊழியரின் கவனக்குறைவால் எரிந்த உணவகம் - மன்னித்த உரிமையாளருக்குப் பாராட்டு
(படம்: Envato Elements)
This audio is generated by an AI tool.
உணவகத்தில் ஏற்பட்ட தீச்சம்பவத்திற்குக் காரணமான ஊழியரை மன்னித்த உரிமையாளருக்குப் பாராட்டு குவிகிறது.
சீனாவின் ஹெனான் (Henan) மாநிலத்தில் சம்பவம் நடந்தது.
தவறிழைத்த ஊழியர் 27 வயது லியு.
வேலை முடிந்ததும், எண்ணெய்ப் பாத்திரம் வைக்கப்பட்டிருந்த அடுப்பை அணைக்க அவர் மறந்தார்.
சமையலறை, சரக்குக் கிடங்கு உள்ளிட்ட இடங்களில் தீ பரவியது.
லியு தீயை அணைக்க முயன்றார்; உணவக வாடிக்கையாளர்கள் தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.
யாருக்கும் காயமில்லை என்றாலும் உணவகம் பெருமளவில் சேதமுற்றது.
இழப்பை ஈடுகட்ட மாதந்தோறும் தம் சம்பளத்தில் ஒரு பகுதியைத் தருவதாக ஊழியர் கூறினார்.
உரிமையாளர் அதை மறுத்துவிட்டார்.
ஊழியர் கடனில் தவிப்பதைப் பார்க்க விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார்.
உரிமையாளரே இழப்பை ஏற்கப் போகிறார் என்ற செய்தி பரவியதும் பலரும் அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டினர்.
உணவகம் அமைந்திருந்த இடத்தின் உரிமையாளர் வாடகையைக் குறைத்தார்; ஊழியர்கள் நன்கொடை கொடுத்தனர்.