சமய ஆசிரியர் squats செய்யச் சொன்னதாகச் சந்தேகம் - 14 வயது மாணவர் மரணம்
வாசிப்புநேரம் -
இந்தோனேசியாவின் வட சுமத்ரா பகுதியில் 14 வயது உயர்நிலைப் பள்ளி மாணவர் மாண்ட சம்பவத்தைக் காவல்துறை விசாரிக்கிறது.
பைபிள் வரிகளை அவர் மனப்பாடம் செய்யத் தவறியதால் அவருக்கு 100 முறை squats எனும் குனிந்து குதித்து நிற்பது தண்டனையாகத் தரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்தத் தண்டனையை விதித்ததாக நம்பப்படும் சமய ஆசிரியர் திருவாட்டி செல்லி விண்டா ஹுதாபியா (Selly Winda Hutapea) வேலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ரிண்டு ஷாபுத்ரா சினாகா (Rindu Syahputra Sinaga) அந்தத் தண்டனையைச் செய்து முடித்த ஒரு வாரத்தில் காலமானார்.
தண்டனையைச் செய்து முடித்த பிறகு ரிண்டுவின் உடல்நலம் மோசமாகப் பாதிக்கப்பட்டதாக அவரது தாயார் கூறினார்.
கால்களில் வலியும் அதிகக் காய்ச்சலும் அவருக்கு ஏற்பட்டது.
ரிண்டுவுக்கு மருத்துவ நிலையத்தில் மருத்துவ உதவி கொடுக்கப்பட்டது. பின்னர் அவர் மருத்துவமனைக்குச் சென்றார். ஆயினும் அவரது உடல்நலம் தேறவில்லை.
ரிண்டுவுக்கு அத்தகைய தண்டனை தரப்படுவது இதுவே முதல்முறை என்று அவரது தாய் கூறினார்.
இப்படியொரு சம்பவம் மீண்டும் நடக்கக்கூடாது; சம்பவம் விசாரிக்கப்படவேண்டும் என்று அவர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
தண்டனை விதித்ததாகக் கூறப்படும் ஆசிரியர் தமது செயலை எண்ணி வருந்துவதாகக் கூறினார்.

ஆதாரம் : Others