18ஆவது மாடியிலிருந்து விழுந்தும் உயிர்தப்பிய 3 வயதுச் சிறுவன்
வாசிப்புநேரம் -
படம்: Envato
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சீனாவில் 18 மாடிக் கட்டடத்திலிருந்து விழுந்த 3 வயதுச் சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளான்.
சம்பவம் ஜூலை 15ஆம் தேதி ஹங்சோவ் (Hangzhou) நகரில் நடந்தது.
சிறுவனைத் தாத்தா பாட்டியின் கவனிப்பில் அவனது பெற்றோர் விட்டுச் சென்றிருந்தனர்.
சிறுவன் உறங்கிவிட்டதாக நம்பித் தாத்தா, பாட்டி இருவரும் மளிகைப் பொருள்கள் வாங்கக் கடைக்குச் சென்றனர்.
அப்போது திடீரென்று விழித்துக்கொண்ட சிறுவன் கழிப்பறைக்குச் சென்று அங்கிருந்த சன்னல்மீது ஏறியதால் கட்டடத்திலிருந்து கீழே விழுந்தான்.
சிறுவன் 18ஆவது மாடியிலிருந்து கிழே விழுந்ததைத் தம்மால் முதலில் நம்பமுடியவில்லை என்றார் தந்தை.
17ஆவது மாடியில் திறந்திருந்த சன்னல்மீது மோதி அதன் பிறகு அருகிலிருந்த மரத்தின்மீது சிறுவன் விழுந்ததால் கடுமையான காயங்கள் ஏற்படவில்லை என்று அவர் சொன்னார்.
சிறுவன் அவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தும் உயிர் பிழைத்தது அதிசயம் என்றனர் மருத்துவர்கள்.
இடது கையில் முறிவு, முதுகுத்தண்டில் சுளுக்கு, உள்ளுறுப்புக் காயங்கள் மட்டுமே சிறுவனுக்கு ஏற்பட்டதாய் அவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து இணையவாசிகள் மாறுபட்ட கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.
சிலர் சிறுவனின் பெற்றோர் கவனக்குறைவாகச் சன்னலைத் திறந்து வைத்திருந்தது ஏன் என்று சாடினர்.
வேறு சிலர் சிறுவன் மிகவும் அதிர்ஷ்டசாலி; அவன் விரைவில் குணமடைய வேண்டும் என்று கருத்துப் பதிவிட்டனர்.

ஆதாரம் : South China Morning Post