Skip to main content
மலேசியப் பேருந்து விபத்து: ஓட்டுநருக்கு 18 அழைப்பாணைகள் உள்ளன
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மலேசியப் பேருந்து விபத்து: ஓட்டுநருக்கு 18 அழைப்பாணைகள் உள்ளன

வாசிப்புநேரம் -
மலேசியப் பேருந்து விபத்து: ஓட்டுநருக்கு 18 அழைப்பாணைகள் உள்ளன

படம்: AFP PHOTO / Perak's Fire and Rescue Department

மலேசியாவில் 15 பல்கலைக்கழக மாணவர்கள் மாண்ட விபத்தில் தொடர்புடைய பேருந்து ஓட்டுநருக்கு ஏற்கனவே18 அழைப்பாணைகள் விதிக்கப்பட்டுள்ளன.

விபத்து நேற்று பேராக் மாநிலத்தின் கெரிக் (Gerik) அருகே நடந்தது.

18 விதிமீறல் சம்பவங்களில் 13 வேக வரம்பு தொடர்புடையது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதுகாப்பு வார்ப் பட்டை அணியாதது, மூன்றாவது வேகக் கட்டுப்பாட்டு விசை விளக்கைக் கொண்டிருக்காதது ஆகியவற்றுக்கும் அழைப்பாணைகள் அனுப்பப்பட்டன.

விபத்தில் சிக்கிய பேருந்துக்கு ஏற்கனவே 21 அழைப்பாணைகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவற்றில் 16 தீர்க்கப்பட்டுள்ளன. மேலும் 5 விசாரணையில் உள்ளதாக The Star தெரிவித்தது.

விபத்து குறித்து விசாரிக்க சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் மலேசிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பின்னிரவு 1.15 மணிக்கு நடந்த விபத்தில் எழுவர் கடுமையாகக் காயமுற்றனர்.
 
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்