Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஹாங்காங் தீ: நெருப்பையும் பொருட்படுத்தாமல் 3 மாதக் குழந்தையைக் காப்பாற்றிய பணிப்பெண்

வாசிப்புநேரம் -
ஹாங்காங் தீ: நெருப்பையும் பொருட்படுத்தாமல் 3 மாதக் குழந்தையைக் காப்பாற்றிய பணிப்பெண்
படம்: Facebook/Imee Marcos
வெளியீடு : 02 Dec 2025 05:16PM புதுப்பிப்பு : 02 Dec 2025 05:38PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஹாங்காங் தீச்சம்பவத்தில் மூன்று மாதக் குழந்தையைக் காப்பாற்றிய பணிப்பெண்ணைப் பலரும் பாராட்டுகின்றனர்.

28 வயது ரொடொரா அல்கராஸ் (Rhodora Alcaraz) பிலிப்பீன்ஸைச் சேர்ந்தவர்.

வறுமை... குடும்பச் சூழல்...

வெளிநாட்டில் வேலை செய்தால் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி அவர் ஹாங்காங்கிற்குச் சென்றார்.

மறுநாளே வாங் ஃபுக் கோர்ட் (Wang Fuk Court) குடியிருப்புப் பகுதியில் தீ மூண்டது.

அவர் பணிப்பெண்ணாக வேலைக்குச் சேர்ந்த குடும்பம் தீயில் சிக்கியது.

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை, மூதாட்டி ஆகியோருடன் அல்கராஸும் தீ மூண்ட கட்டடத்தில் சிக்கிக்கொண்டார்.

உடனே அல்கராஸ் பதற்றத்துடன் அவரது தங்கைக்குத் தகவல் சொன்னார்.

"மூச்சுவிட முடியவில்லை... பலவீனமாக உணர்கிறேன்" என்று அந்தப் பதிவில் அவரது குரல் நடுங்கியது.

அவர் உயிர் பிழைப்பாரா என்பதே சந்தேகமாக இருந்தது.

எனினும் அல்கராஸ் தனது கவனிப்பில் இருந்து குழந்தையையும் மூதாட்டியையும் காப்பாற்ற முடிவு செய்தார்.

அவர்களைக் காப்பாற்றியதோடு அவரும் உயிர் தப்பினார்.

மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலரும் அல்கராஸின் தன்னலமற்ற தைரியமான செயலைப் பாராட்டுகின்றனர்.

பொதுவாகவே அல்கராஸ் குழந்தைகளை மிகவும் அன்பாகப் பார்த்துக்கொள்பவர்.

அவர் தம் உயிரைப் பணயம் வைத்துக் குழந்தையைக் காப்பாற்றியதில் ஆச்சரியம் ஏதும் இல்லை என்று அவரது முன்னாள் முதலாளி கூறினார்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்