Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரேஸிலில் வெள்ளம் - சுமார் 200 பேரைக் காணவில்லை

வாசிப்புநேரம் -
பிரேஸிலில் வெள்ளம் - சுமார் 200 பேரைக் காணவில்லை

(படம்: MAURO PIMENTEL / AFP)

பிரேஸிலின் பெட்ரோபலிஸ் (Petropolis) நகரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சுமார் 200 பேரைக் காணவில்லை.

அங்கு தொடர்ந்து 4 நாள்களாகத் திடீர் வெள்ளமும், மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

ஆகவே, பேரிடரில் சிக்கியவர்களைத் தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நேற்று (19 பிப்ரவரி) பெட்ரோபலிஸ் நகரில் பெய்த கனத்த மழையால் அவசரநிலை மீட்புப் படையினர் தங்களது பணியைப் பலமுறை நிறுத்திவைக்க நேரிட்டது.

இதுவரை 27 குழந்தைகள், பதின்ம வயதினர் உட்பட, 146 பேர் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

900க்கும் மேற்பட்டோர் பள்ளிகளிலும் தற்காலிகத் தங்குமிடங்களிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்.

பெட்ரோபலிஸில் உள்ள கரடுமுரடான நிலப்பகுதிகளில் கைப்பிடிக் கருவிகள் கொண்டு தேடல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் 80 வீடுகள் வரை நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டன.

செய்தி செயலி பல்வேறு புதிய அம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது.  இப்போதே ‘Update’ செய்யுங்கள் அல்லது ‘Mediacorp Seithi’ செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்