Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரேசிலில் பள்ளிக்கூடங்களில் கைத்தொலைபேசியைப் பயன்படுத்தத் தடை

வாசிப்புநேரம் -
பிரேசில் அதிபர் பள்ளிக்கூடங்களில் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தக் கட்டுப்பாடு விதிக்கும் மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார்.

தொடக்கப்பள்ளி முதல் உயர்கல்வி நிலையங்கள்வரை பயிலும் மாணவர்களுக்கான அந்தச் சட்டம் பிரேசிலில் அடுத்த மாதம் நடப்புக்கு வரும்.

நெருக்கடி அல்லது அபாயம், கல்விப் பணி என குறிப்பிட்ட நேரங்களில் கைத்தொலைபேசியைப் பயன்படுத்த அனுமதி உண்டு. தேவையுள்ள உடற்குறையுள்ளோருக்கும் விதிவிலக்கு இருக்கும்.

பிள்ளைகள் சிறுவயதிலேயே இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்குவதால் அவர்களின் செயல்களைப் பெற்றோர் கண்காணிக்க முடியவில்லை. பள்ளிகளில் கைத்தொலைபேசிக் கட்டுப்பாடு அதற்கு உதவும் என்கிறார் பிரேசில் கல்வியமைச்சர்.

ஆளுங்கட்சியும் எதிர்த்தரப்பும் புதிய மசோதாவை ஒருமனதாக ஆதரித்தன.

பள்ளிகளில் கைத்தொலைபேசிக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படுவதைப் பெற்றோரும் வரவேற்கின்றனர்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ (Rio de Janeiro) உள்ளிட்ட சில மாநிலங்கள் பள்ளிகளில் கைத்தொலைபேசியைப் பயன்படுத்த ஏற்கனவே கட்டுப்பாடு விதித்துள்ளன.

ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில் சிரமம் நீடிப்பதாகத் தெரிகிறது.

தனியார், அரசாங்கப் பள்ளிகள் இரண்டிலுமே கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தத் தடைவிதிக்க வேண்டுமா என்று சாவ் பாவ்லோ (Sao Paulo) நகர அதிகாரிகள் ஆராய்கின்றனர்.
 
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்