நெய்மார் கழற்றிக்கொடுத்த சட்டையால் சிறுவனுக்கு அச்சுறுத்தல்
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: AFP/Gabriel Bouys)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
பிரேசிலின் சாவ் பாவ்லோ (Sao Paulo) நகரின் காற்பந்து அரங்கிலிருந்து எட்டு வயதுச் சிறுவனையும் அவனுடைய குடும்பத்தினரையும் காவல்துறையினர் பாதுகாப்பாய் வெளியேற்றினர்.
கொரிந்தியன்ஸ் - சாண்டோஸ் (Corinthians-Santos) அணிகளுக்கு இடையிலான போட்டி அரங்கில் நடந்தது.
சாண்டோஸ் அணிக்காக விளையாடினார் நட்சத்திர வீரர் நெய்மார் (Neymar).
1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது சாண்டோஸ் அணி.
கொரிந்தியன் அணி ஆதரவாளரான சிறுவனுக்கு நெய்மார் தம் சட்டையைக் கழற்றிக் கொடுத்தார். அதைக்கண்ட ரசிகர்கள் சிலர் கொந்தளித்தனர்.
ஒருகட்டத்தில் சிறுவனும் அவனுடைய குடும்பத்தினரும் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் தனிப்பாதை வழியாக அரங்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அந்தக் காணொளி காட்டுத்தீபோல் இணையத்தில் பரவுகிறது.
சிறுவனையும் குடும்பத்தினரையும் அச்சுறுத்தியோருக்கு கொரிந்தியன்ஸ் அணி கண்டனம் தெரிவித்தது.
காற்பந்து விளையாட்டின் போட்டி உணர்வு சிறுவனின் பாதுகாப்புக்கும் கண்ணியத்துக்கும் ஒருபோதும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்று கொரிந்தியன்ஸ் அணி சொன்னது.
ஒரு சிறுவன் இன்னோர் அணி வீரரை விரும்புவதில் எந்தத் தவறும் இல்லை என்று நெய்மாரும் கூறினார்.

ஆதாரம் : AFP