Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரேசிலில் ஒரே வாரத்தில் 10 குரங்குகள் கொல்லப்பட்டன... உலகச் சுகாதார நிறுவனம் வருத்தம்

வாசிப்புநேரம் -

பிரேசிலில் ஒரே வாரத்துக்குள் 10 குரங்குகள் கொல்லப்பட்டது குறித்து உலகச் சுகாதார நிறுவனம் வருத்தம் தெரிவித்திருக்கிறது. 

அந்நாட்டில் அதிகமான குரங்கம்மைத் தொற்றுச் சம்பவங்கள் பதிவாயிருக்கின்றன. அந்த எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அத்தனை குரங்குகள் கொல்லப்பட்டன. 

என்றாலும், குரங்கம்மைக் கிருமி குரங்குகளிடமிருந்து பரவுவதைவிட அதிகமாக மற்ற மனிதர்களால் பரவுகிறது என்று உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்தது. 

இதற்கிடையே பிரேசிலில் 1,700க்கும் மேற்பட்ட குரங்கம்மைத் தொற்றுச் சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. அங்குக் குரங்கம்மை தொற்றிய ஒருவர் சென்ற மாத இறுதியில் மாண்டார். அவருக்கு ஏற்கனவே மற்ற உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன. 

விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குக் குரங்கம்மை போன்ற நோய்கள் பரவலாம். ஆனால் தற்போது பரவும் குரங்கம்மை மனிதர்களிடையே பரவுவதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்