Skip to main content
விழுந்து கிடந்த பாரந்தூக்கி... அடித்துச் சென்றது ரயில்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

விழுந்து கிடந்த பாரந்தூக்கி... அடித்துச் சென்றது ரயில்

வாசிப்புநேரம் -
விழுந்து கிடந்த பாரந்தூக்கி... அடித்துச் சென்றது ரயில்

(படம்: சமூக ஊடகம்)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பிரேசிலின் சாவ் பாவ்லோ (Sao Paolo) நகரில் ஒரு பயங்கரமான சம்பவம்!

மேம்பாலத்தில் தண்டவாளம் அதில்விழுந்து கிடக்கிறது ஒரு பாரந்தூக்கி.

அதை ரயில் ஒன்று அடித்துத் தள்ளுக்க்றது.

பாரந்தூக்கி கீழே சாலையில் விழுகிறது.

சம்பவம் நேற்று முன்தினம் (24 அக்டோபர்) நடந்தது.

அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் காணொளி இணையத்தில் பரவுகிறது.

சாலையில் மக்கள் கார்களையும் மோட்டார்சைக்கிள்களையும் ஓட்டிச் செல்கின்றனர். சிலர் நடந்துகொண்டிருந்தனர்.

அதிர்ஷ்டவசமாய் பாரந்தூக்கி யார் மீதும் விழவில்லை.

பாரந்தூக்கியை இயக்கிய ஊழியருக்குச் சில காயங்கள் ஏற்பட்டன. அவருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

ரயில் பயணிகள் அனைவரும் ரயிலிலிருந்து பத்திரமாக வெளியேறினர்.

காணொளியைக் கண்ட இணையவாசிகள் வியப்படைந்தனர்.

பெரும்பாலானோர், யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படாதது நிம்மதி அளிப்பதாகக் கூறினர்.

மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் நூலிழையில் தப்பியதைப் பலர் சுட்டினர்.

பாரந்தூக்கி ஏன் ரயில் தண்டவாளத்தில் விழுந்து கிடந்தது என்று சிலர் கேட்டனர்.

காணொளியைப் பார்த்த ஒருவர், AI தயாரித்தது போல் இருக்கிறது என்றும் நம்பவே முடியவில்லை என்றும் பதிவிட்டார்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்