சிங்கத்தின் கூண்டுக்குள் புகுந்த 19 வயது இளையர் மரணம்
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
பிரேசிலில் (Brazil) உள்ள விலங்கியல் பூங்காவில் சிங்கத்தின் கூண்டுக்குள் அத்துமீறி நுழைந்த 19 வயது இளையர் மாண்டார்.
சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்ததாக NBC செய்தி சொன்னது.
இளையர் 6 மீட்டர் உயரமுள்ள சுவற்றின் மீது ஏறினார்.
அவர் மரக் கிளைகள் வழியாக இறங்கி கூண்டிற்குள் செல்ல எண்ணினார்.
அங்கிருந்த பெண் சிங்கம் இளையரை மரத்திலிருந்து இழுத்துச் சென்றுவிட்டது.
மீட்புப் பணியாளர்கள் விரைந்து சென்றும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
அவர் schizophrenia எனும் மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்; பல முறை மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று சொல்லப்பட்டது.
அவர் ஆப்பிரிக்காவுக்குச் சென்று சிங்கங்களை அடக்க வேண்டும் என்று கனவு கண்டதாக அவரது மனநல ஆலோசகர் சொன்னார்.
அவர் திருட்டுத்தனமாக ஆப்பிரிக்காவுக்குச் செல்ல முயன்றதாகவும் கூறப்பட்டது.
விசாரணை முடிவு பெறும் வரை அந்த விலங்கியல் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஆதாரம் : Others