வெள்ளத்தால் நீர் மூலம் பரவும் நோய்கள்
வாசிப்புநேரம் -

(படம்: AP/Andre Penner)
பிரேசிலின் தெற்கில் வெள்ளத்தின் காரணமாக நீர் மூலம் நோய்கள் பரவுகின்றன.
குறைந்தது நால்வர் மாண்டனர். பலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அண்மை வாரங்களில் வெள்ளத்தால் கிட்டதட்ட 170 பேர் அங்கு மாண்டனர்.
பருவநிலைப் பேரிடர் என்று பிரேசில் அரசாங்கம் தற்போதைய நிலையை வருணிக்கிறது.
இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கழிவுநீர,் தூய்மையான நீர் கட்டமைப்புகளில் கலந்திருப்பதால் மேலும் நோய்கள் பரவக்கூடிய அபாயம் நிலவுவதாக அதிகாரிகள் கூறினர்.
பிரேசிலின் தென் வட்டாரத்தில் முக்கியக் கட்டமைப்புகள் உடைந்துவிட்டன. பல சுகாதார நிலையங்கள் செயல்பட முடியாத நிலை.