பிரேசிலில் விமான விபத்து - 3 நாள் துக்கம்
வாசிப்புநேரம் -

(படம்: MIGUEL SCHINCARIOL/AFP)
பிரேசிலில் விமான விபத்தில் மாண்டவர்களுக்காக 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா (Luiz Inacio Lula da Silva) அறிவித்துள்ளார்.
அவர் தமது X சமூக ஊடகத்தில் அதனைப் பதிவிட்டதாக CNN கூறியது.
பிரேசிலின் தென் மாநிலமான பரானாவிலிருந்து (Paraná) சாவ் பாவ்லோ (Sao Paulo) நகருக்குச் சென்று கொண்டிருந்த விமானம் வின்யேடோ (Vinhedo) நகரில் விழுந்து நொறுங்கியது.
அது குடியிருப்புப் பகுதியில் விழுந்ததாகப் பிரேசிலிய குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
குடியிருப்புப் பகுதியில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
விமானத்தில் இருந்த 61 பேரும் மாண்டனர்.
மாண்டவர்களை அடையாளம் காண விபத்து நடந்த பகுதியில் மருத்துவக் குழு சோதனை நடத்தி வருகிறது
விமானத்தின் தகவல் பதிவுப் பெட்டி கிடைத்துள்ளது. அதனை வைத்து விபத்துக்கான காரணம் ஆராயப்படுகிறது.

ஆதாரம் : Others